திருப்புவனம் : திருப்புவனத்தில் பருவ மழையால் நிரம்பியுள்ள நீர்நிலைகளின் தன்மை குறித்து கோட்டாட்சியர் முத்துகழுவன் தலைமையில் தாசில்தார் மூர்த்தி, துணை தாசில்தார் தர்மராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த ஒன்றியத்தில் 122 பொதுப்பணி, வைகை ஆற்று இணைப்புடன் 65, இணைப்பின்றி 57 கண்மாய்கள் 111 கண்மாய்கள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்து, கண்மாய் கரைகள் சேதம் ஏற்படாமல் கண்காணிக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.