பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் படம் வைக்கப்பட்டதால், ஹிந்து முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.கோவை துடியலூர் அருகே, அசோகபுரம் நால் ரோட்டில், 'நாம் தமிழர்' கட்சி ஆதரவாளரான ஆனந்தகுமார் என்பவர் நேற்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி, அவருடைய உருவ படத்தை வைத்தார். இதற்கு அப்பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனந்தகுமாருக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியினர், அப்பகுதியில் திரண்டனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் நிலை உருவானது. துடியலூர் போலீசார் இரு தரப்பினருடனும் பேசி, மோதலை தவிர்த்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.