ராமேஸ்வரம்:நிவர் புயல் சென்னையில் கரையைக் கடந்ததால் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கடல் உள்வாங்கியதால், கடலோரத்தில் பாறைகள் வெளியில் தெரிந்தன.வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நவ., 25 இரவு சென்னை, கடலுார் இடையே கரை கடந்ததால், இப்பகுதியில் கடல் நீர் புகுந்தும், கன மழை பெய்தது. ஆனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் கடந்த, 3 தினங்களாக கடலில் கொந்தளிப்பு, அதிக நீரோட்டம் இருந்தது.இந்நிலையில் நிவர் புயல் கரை கடந்ததும் நேற்று, பாம்பன் கடல் உள்வாங்கியதால் கடலோரத்தில் பாறைகள், சிறிய பவளப் பாறைகள் பாசி படர்ந்து வெளியில் தெரிந்தன. ஆனால், மாலையில் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும், கடற்கரை இயல்பு நிலைக்குத் திரும்பியது.