கோவை: அமெரிக்காவில், ஹார்வார்டு மருத்துவப் பள்ளியின் கீழ் இயங்கும், 'பெத் இஸ்ரேல்' மருத்துவ மையத்தில், ஈஷா நிறுவனர் சத்குரு பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
'சத்குரு சென்டர் பார் ஏ கான்சியஸ் பிளானட்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம், மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல், கருணை ஆகிய மூன்று அம்சங்களால், ஒருவரின் ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக ஆராய உள்ளது.
மைய இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், “இந்த பிரத்யேக மையம் வாயிலாக, மருத்துவம், சிந்தனை அறிவியலை ஒருங்கிணைத்து, நோயாளிகளின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறையை கண்டறிய உள்ளோம்,” என்றார்.