ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் ரகசிய பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாக முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் மாநில துணைத் தலைவர்முகம்மது ரைசுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:பெரியபட்டினத்தில் ரகசிய இடத்தில் நவ.24ல் எஸ்.பி.,கார்த்திக் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போதுஅனுமதி இன்றி தங்கி மத பயிற்சியில் ஈடுபட்டிருந்த 20 முதல் 25 வயதுள்ள35 இளைஞர்கள் பிடிபட்டனர்.
இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2013ல் பெரியபட்டினம் கடற்கரையோர தோப்புகளில் ரகசிய பயிற்சியில் ஈடுபட்டஅஸ்ஸாம், காஷ்மீர், பீகார், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த30 இளைஞர்களை போலீசார் பிடித்தனர்.
ஊராட்சி நிர்வாகம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலரும் வந்து செல்கின்றனர். பெரிய பட்டனத்தின் தோப்பு களில் முகாம்கள் அமைக்கப்பட்டு யோகா, உடற்பயிற்சி என்ற பெயரில் ரகசிய பயிற்சிகள் நடக்கின்றன.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தமிழகத்தில் முதல் முறையாக ஒரு ஊராட்சியை கைப்பற்றியதை வெளிப்படுத்தும் வகையில் அரசு நிதியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடத்தில்,'தமிழகத்தின் முதல் இஸ்லாமிய தலைநகரம் பெரியபட்டினம்' என கல்வெட்டு வைத்தனர்.
பல்வேறு அமைப்பினர் போராட்ட அறிவிப்பு வெளியிட்ட பின் அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகமோ, அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை.பஞ்சாயத்து நிர்வாகிகள் மீதும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிதி நேரடியாக மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.