கொடைக்கானல் : கொடைக்கானலில் கடந்த வாரம் பெய்த கன மழையால் நகர் மற்றும் கிராம பகுதியை சுற்றியுள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார், புலிச் சோலை, வட்டக் கானல், தேவதை அருவி, புலவி சார், வில்பட்டி, கரடி சோலை அருவி என நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் ஏராளமாக அருவிகள் உள்ளன.கனமழையால் இந்த அருவிகளில் பால் போல் தண்ணீர் கொட்டுகின்றது. இதனை கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
எதிர்வரும் வாரங்களிலும் மழை பெய்யும் சூழலில், ஆங்காங்கே மலை குன்றுகளில் ஊற்றெடுக்கும் அருவியின் அழகு அனைவரையும் கவர்ந்துள்ளது. மழை பொழிவால் கொடைக்கானலில் குளிரும் அதிகமாக உள்ளது. பயணிகள் இந்த சீசனையும் அனுபவித்து மகிழ்கின்றனர்.