கூடலுார்:நீர்ப்பிடிப்பில் மழையில்லாததால் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் நவ.18ல் அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 6098 கனஅடி நீர் வந்தது. அதன்பின் மழை குறைவால் நீர்வரத்து குறைந்தது.நேற்று காலை 8:30 மணிப்படி நீர்மட்டம் 127.45 அடியாக (மொத்த உயரம் 152 அடி) குறைந்தது. வினாடிக்கு 813 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1555 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.