வேடசந்துார் : திண்டுக்கல் - கரூர் ரோட்டில் வேடசந்துார் பிரிவு அருகே விபத்துகள் நிகழ்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் - கரூர் 4 வழிச்சாலையில் காக்காத்தோப்பூர் அருகே வேடசந்துார் பிரிவு ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.காக்காத் தோப்பூருக்கு வடபகுதியில் மேற்கு புறம் சர்வீஸ் ரோடு அமைக்க மண் பாதை மட்டும் உள்ளது. இதுவரை ரோடாக அமைக்கவில்லை. இதனால் வேடசந்துார் நகருக்குள் வந்து, பின்னர் ஒட்டன்சத்திரம் செல்லும் நிலை உள்ளது. எனவே வேடசந்துார் செல்ல சப் வே அமைத்து, வேடசந்துார் - ஒட்டன்சத்திரம் ரோடு பாலத்தினுள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யனார் நகர் டி.பழனிச்சாமி கூறியதாவது: இங்கு சப்வே அமைக்கும்படி மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை அமைக்கும் நிறுவனத்திடம் மனு அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. மற்ற பகுதிகளில் சப்வே அமைத்துள்ளனர். இங்கு அமைக்காததால், குறுக்காக செல்வோரால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது, என்றார்.