ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே குப்பைகள்குவிந்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிக்குஉள்ளாகியுள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். தற்போதைய வடகிழக்கு பருவமழை சீசனில் அக்னி தீர்த்த கரையில் ஒதுங்கும் கடல்பாசிகள், கோயில் வீதியில் தேங்கும் குப்பையை சேகரிக்கும் துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவது இல்லை.
குப்பையை அக்னி தீர்த்த கரை அருகே தெற்கில் 100 மீட்டர் துாரத்தில் கடலோரத்தில் மலை போல் குவித்துஉள்ளனர். துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உட்கொள்கின்றன. உலா வரும் பன்றிகளால் மர்ம காய்ச்சல் பரவும் ஆபத்தும் உள்ளது. இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி செல்கின்றனர். எனவே அக்னி தீர்த்த அருகே கொட்டிய குப்பையை அகற்றி, புனித நகரின் சுகாதாரத்தை மேம்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.