ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் - பழநி ரோட்டில் விழக்கூடிய நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்.
ஒட்டன்சத்திரம் - பழநி ரோட்டில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இவற்றின் வயது பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மரத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு, பிளவுபட்டு உள்ளது. பலத்த காற்று வீசினாலே விழும் நிலையில் பல மரங்கள் உள்ளன.மரத்தின் அருகில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.
வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி, நல்லாக்கவுண்டன் நகர் மயானம் எதிரே உள்ள புளிய மரம் எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே மின்கம்பம் ஒன்றும் உள்ளது. பலத்த காற்று வீசினால் மரம், மின்கம்பத்தின் மீது விழும் நிலை உள்ளது. இதேபோல் பல மரங்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளன. விபத்து வாய்ப்புள்ள மரங்களை கண்டறிந்து அகற்ற வேண்டும்.