செம்பட்டி : சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கான குழாய் வழித்தடத்தில் உடைப்பால், ஆத்துார் தண்ணீர் தென்னந்தோப்பிற்கு பாய்கிறது.
பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஆத்துார் காமராஜர் நீர்தேக்க பகுதி தண்ணீர் வினியோகமும் நடக்கிறது. இங்குள்ள நீருந்து நிலையத்தில், ஆழ்துளை கிணறுகளில் எடுக்கப்படும் தண்ணீரை குளோரினேஷன் செய்து அனுப்புகின்றனர். வழித்தட பகுதியில் குழாய் பராமரிப்பில், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புகார் உள்ளது.குழாய் சேதத்தால் அதிகளவு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
சில இடங்களில் குட்டையாக தேங்கியுள்ளது. சில இடங்களில் வழியோர தோட்டங்களில் தென்னை வளர்ப்புக்கும் பாய்ச்சுகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக பலரும் தவிக்கும் நிலையில், குளோரினேஷன் செய்யப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.