கிடைத்தது அனுமதி கிடைக்காதது நிதி; பரப்பலாறு அணையில் தூர்வார தாமதம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கிடைத்தது அனுமதி கிடைக்காதது நிதி; பரப்பலாறு அணையில் தூர்வார தாமதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2020
01:56

-திண்டுக்கல்-தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் உள்ள ஊர் ஒட்டன்சத்திரம். விவசாயம் நிறைந்த இப்பூமியில் காய்கறிகள், மக்கச்சோளம், முருங்கை, சூரியகாந்தி, புகையிலை, பருத்தி அதிகம் சாகுபடியாகிறது. இதற்கு காரணமே ஒட்டன்சத்திரம் - பாச்சலுார் செல்லும் வழியில் வடகாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணை தான்.அணையின் வரலாறுபாச்சலுார், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் சங்கமிக்கும் இடம் என்று கூறலாம்.தமுக்குப்பாறை, தட்டப்பாறை என்ற 2 பிரமாண்ட பாறைகளுக்கு நடுவே பள்ளத்தை நோக்கி பாய்கிறது பரப்பலாறு. அந்த இரண்டு பாறைகளையும் இணைத்து 90 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது பரப்பலாறு அணை. 1972 பிப்ரவரி 14 ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1975 ஆகஸ்ட் 30 ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் அணை திறக்கப்பட்டது.கடல் மட்டத்தில் இருந்து 120 அடி உயரம், 283 ஏக்கர் பரப்பளவை கொண்டு இருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதியின் நீளம் 81.02 மீ. அணையில் 197.95 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கலாம். இது நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 2,325 ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கிறது.வரப்பிரசாதம்பரப்பலாறுஅணை நிரம்பினால் நங்காஞ்சி ஆறு வழியாக சத்திரப்பட்டி, முத்துபூபாலசமுத்திரம், பெருமாள்குளம், சடையன்குளம், செங்குளம் ஆகிய குளங்களுக்கு நீர் சென்ற பின் இறுதியாக இடையகோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு செல்கிறது. குளங்கள் நிரம்பினால் ஒட்டன்சத்திரம் வட்டாரத்தின் குடிநீர் தேவையும், நிலங்கள் பாசன வசதியும் பெறும். ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் வசிக்கும் யானை, காட்டு மாடு, மான்கள், காட்டுப் பன்றி, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளின் தாகம் தணிப்பதாகவும் பரப்பலாறு விளங்குகிறது. இத்தகைய பரப்பலாறு அணையின் தற்போதைய நிலை பரிதாபத்திற்கு உரியது.45 ஆண்டுகள்அணை கட்டியது முதல் தற்போது வரை துார்வாராததால் முற்றிலும் துார்ந்து போய் விட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் 30 அடிக்கு மேல் வண்டல் மண், கழிவுகள் பரவி கிடக்கிறது. மழை பெய்தால் எளிதில் நிரம்பும் அணை, அதே வேகத்தில் வறண்டும் விடுகிறது.இதனால் கோடை காலத்தில் குடிநீருக்கும் பாசனத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பரப்பலாறு அணையயை துார்வார வேண்டும் என்ற விவசாயிகள் எழுப்பிய குரல் இன்றும் அடங்கவில்லை.காரணம், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2014 ல் அணை ரூ.20 கோடியில் துர்வாரப்படும் என அறிவித்தார். அணையை துர்வாரும் முயற்சியில் பொதுப்பணித்துறையினர் களமிறங்கினர். அணைப்பகுதி வனப்பகுதிக்குள் இருப்பதால், வனத்துறை அனுமதி பெறுவது கட்டாயமானது. இதனால் வனத்துறை அனுமதிக்காக சில ஆண்டுகள் உருண்டோடியது.தற்போது வனத்துறையின் அனுமதி கிடைத்து விட்டாலும், மாநில அரசு துார்வாருவதற்கான அரசாணையை பிறப்பித்து, இன்னும் நிதி ஒதுக்கவில்லை. இதனால் அணைக்கான விடிவு காலம் தாமதமாகி வருகிறது. இரண்டு மாவட்ட விவசாயிகளின் நிலையை மனதில் வைத்து அணையை துர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுலா தலமாக்கலாம்ஒட்டன்சத்திரம் - பாய்ச்சலுார் வழியில் 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்தால் பரப்பலாறு அணையை அடையலாம். அணைக்கு செல்லும் பகுதி முழுவதும் இயற்கை வளம் இறைந்து கிடப்பதால் சுற்றுலா தலமாக்கலாம். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வன விலங்குகள் தண்ணீர், உணவு அருந்துவது பயணிகளுக்கு காண கிடைக்காத காட்சியாகும்.தொலைபேசி கண்டு பிடிக்கப்படாத காலத்தில் அணையின் நிலையை அதிகாரிகளுக்கு தெரிவிக்க பயன்படுத்திய 'வாக்கி டாக்கி' சாதனங்களுக்கான 'டவர்' இன்னும் அணைப்பகுதியில் உள்ளது. அணைக்கு செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.அணையின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை சேதமடைந்துள்ளது. கதவுகள் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் அணை பகுதி உள்ளது. இதை தடுத்து, வைகை அணை போல் பரப்பலாறு அணையையும் அழகுப்படுத்தி சுற்றுலா தலமாக்கலாம்.குடிநீர் ஆதாரம்பரப்பலாறு அணையை துார்வாரி, வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்க வேண்டும். அணை முழு கொள்ளவை எட்டினாலும் 30 அடிக்கு சேறும் சகதியுமாக இருப்பதால் 60 அடி தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும். பரப்பலாறு அணையை நம்பி ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி, கரூர் விவசாயிகளும் உள்ளனர். எனவே, தாமதிக்காமல் அணையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கந்தசாமி, அப்பியம்பட்டி.நடவடிக்கை தேவை


பரப்பலாறு அணையை நம்பி எண்ணற்ற குளங்கள் உள்ளன. அவை நிரம்பினால் வழியோர கிராமங்களில் விவசாயம் நடக்கும். துார்வாராததால் அணை நிரம்பினாலும் பாதிக்கும் மேல் தண்ணீரை பயன்படுத்த முடியாது. கோடையில் குடிநீருக்கு சிக்கல் ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிக்கிறது. துார்வாரினால் ஒட்டன்சத்திரத்தின் நீராதாரம் பெருகும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆண்டு முழுவதும் குடிநீருக்கு பிரச்னை இருக்காது. அரசு நடவடிக்கை தேவை.- பெரியசாமி, அரசப்பிள்ளைபட்டி.அனுமதி வழங்கியாச்சேமாவட்ட வன அலுவலர் வித்யா கூறுகையில், 'பரப்பலாறு அணையை துார்வாருவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. பொதுப்பணித்துறையினர் எப்போது வேண்டுமானாலும் அணையை துார்வாரலாம்', என்றார்.அரசாணை பிறப்பிக்க வேண்டும்


பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'அணையை துார்வாருவதற்கான நடவடிக்கைகள் தயார். அரசாணை பிறப்பித்ததும், நிதி ஒதுக்கியதும் பணிகளை துவங்கி விடுவோம்' என்றார்.அரசாணை பிறப்பிக்க வேண்டும்பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'அணையை துார்வாருவதற்கான நடவடிக்கைகள் தயார். அரசாணை பிறப்பித்ததும், நிதி ஒதுக்கியதும் பணிகளை துவங்கி விடுவோம்' என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X