மதுரை : அனைத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மதுரையில் அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னபொண்ணு தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் துவக்கி வைத்தார். பல்வேறு துறை சங்க தலைவர்கள் மணிகண்டன், சரவணப்பெருமாள், ஜெயராமன், அன்பழகன், பரமேஸ்வரன், மனோகரன், சோலையன் பேசினர்.மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் முடித்து வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.