திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயில், தனியார் மண்டபங்களில் நேற்று 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் இருப்பதால் மக்கள் கோயிலில் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமாக வருகின்றனர். தவிர ஊருக்குள் 100க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன.சுவாமி முன்பு திருமணம் செய்து கொள்ள உபய கட்டணம் ரூ.3 ஆயிரம். இதனால் சிலர் கோயில் மண்டபங்களில் திருமணத்தை முடித்துக் கொள்கின்றனர். தவிர பரிகார திருமணங்களும் நடக்கின்றன.
நேற்று கோயிலுக்குள் 76 பதிவு பெற்ற திருமணங்களும், 30க்கும் மேற்பட்ட பரிகார திருமணங்களும் நடந்தன. 100க்கும் மேற்பட்டோர் மண்டபங்களில் திருமணம் முடித்தும் சென்றனர். கோயிலுக்குள்ளும், ரத வீதிகளிலும் ஏராளமான கூட்டம் காணப்பட்டது.மெயின் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் டவுன் பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. திருமண நாட்களில் இரண்டு பாலங்களுக்கு இடையே மெயின் ரோட்டின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த தடைவிதிக்க வேண்டும்.