திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமிதோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா தடை உத்தரவால் நவ., 29 கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்று கார்த்திகை தீபத்திருநாள். நவ., 28 மாலை முதல் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்க அனுமதி இல்லை. நவ., 29 அன்று சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். அர்ச்சனை, பால் அபிஷேகத்திற்கு அனுமதி இல்லை என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.