திருப்பூர்:'நிவர்' புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முன்பதிவு கட்டணத்தை, அடுத்த ஆண்டு மே வரை திரும்ப பெறலாம் என, ரயில்வே அறிவித்துள்ளது.
'நிவர்' புயல் காரணமாக, கோவையில் இருந்து திருப்பூர் வழியே சென்னை செல்லும் நான்கு எக்ஸ்பிரஸ் ரயில், ஆலப்புழா, திருவனந்தபுரம், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் உட்பட, 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இதனால், நவ., 25 மற்றும், 26ம் தேதி பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், ரயில் ரத்து செய்யப்பட்டதால், அடுத்த ஆண்டு மே 25 வரை, அதாவது, ஆறு மாத காலம் முன்பதிவு செய்த கட்டண தொகையை திரும்ப பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஸ்டேஷன்களில் உள்ளது. அவற்றை பூர்த்தி செய்து வழங்கி முழு கட்டணத்தை தொகை உடனே திரும்ப பெறலாம்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.