மதுரை : மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளதாவது: இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு (ஏர்மென்) குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆள்சேர்ப்பு நிகழ்ச்சி டிச.,12 முதல் 19 வரை புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் பங்கேற்க www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் இன்றும், நாளையும் (நவ.,27,28) முன்பதிவு செய்யலாம் என ராணுவத் துறை தெரிவித்துள்ளது.பிளஸ் 2, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மற்றும் கல்லுாரிகளில் முதல் மற்றும் 2ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மட்டும் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.