உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில், புதிய கல்விக்கொள்கை மற்றும்உயர் கல்வி முறையில்ஆசிரியர்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் ரவி வரவேற்றார். தலைவர் பாலகிருஷ்ணன், தாளாளர் பாண்டியன், பொருளாளர் வனராஜா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துணை முதல்வர் ஜோதிராஜன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பேராசிரியர்கள் பங்கேற்றனர். நாகர்கோவில் சிவந்தி ஆதித்தனார் கல்லுாரி கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் இளங்கோ பேசியதாவது:
புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் ஒரு பாடத்தில் மட்டுமல்லாதுதாங்கள் விரும்பிய பாடங்களை படிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பொறியியல் படிக்கும்மாணவர் பொருளாதாரத்தையும் படிக்கலாம். பொருளாதாரம் படிக்கும்மாணவர் கம்ப்யூட்டர்கல்வி உள்ளிட்ட அறிவியல் பாடத்தையும் படிக்கலாம். அனைத்து புலங்களிலும் திறமையான மாணவர்களை இது உருவாக்கும். அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்கள் துறையில்தரத்தை உயர்த்திக்கொண்டால்தான் மாணவர்களின் தரத்தை உயர்த்த வழிகாட்ட முடியும். புதிய கல்விக் கொள்கையினால் இருவரது தரமும் உயரும் என்றார்.