மதுரை : மதுரை செக்கானுாரணி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா. 2017ல் நல்லதம்பி மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் நல்லதம்பியின் மகன் பெயரை சேர்க்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ரூ.1 லட்சம் பேரம் பேசப்பட்டது. ரூ.80 ஆயிரம் வழங்க ஒப்பு கொண்டனர்.
முதல்கட்டமாக நேற்று ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அனிதாவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், குமரகுரு, சூர்யகலா, அம்ரோஸ் ஆகியோர் கைது செய்தனர்.