கூடலுார் : கூடலுாரில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர்.
கம்பத்தில் கஞ்சா தோட்டத்தை மோப்ப நாய் வெற்றி உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து சமீபத்தில் அழித்தனர். இதனைத் தொடர்ந்து கூடலுார், கம்பம் பகுதியில் கஞ்சா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கூடலுார் அண்ணாநகர், புதிய பஸ் ஸ்டாண்ட், மாமுண்டித்தேவர் சந்து உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.ஐ.,க்கள் கணேசன், தினகரபாண்டியன் மற்றும் போலீசார்
மோப்ப நாய் வெற்றி உதவியுடன் கஞ்சா பதுக்கப்பட்டதா என சோதனையில் ஈடுபட்டனர். எதுவும் சிக்கவில்லை.