மீனாட்சியம்மன் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு | தேனி செய்திகள் | Dinamalar
மீனாட்சியம்மன் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 நவ
2020
04:18

போடி : குரங்கணி, கொட்டகுடி பகுதியில் மழையால் போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.



போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய். 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதில் தண்ணீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, பத்திரகாளிபுரம், மீனாட்சிபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராம கிணறுகளில் தண்ணீர் பெருகுவதோடு, 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பயன் பெறும்.



கேரளா மற்றும் குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்தால் மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X