ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வேலப்பர் கோயில் வளாகத்தில் சமுதாயக்கூடம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோயிலுக்கு கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்திரை விழாவில் ஆயிரக்கணக்கானோர் கூடுவர். வளாகத்தில் கருப்பசுவாமி கோயில் அருகே பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் சேதமடைந்துள்ளது. பொதுக்கழிப்பறை வசதி இல்லை. கோயிலில் காதுகுத்து, அன்னதானம் நிகழ்ச்சி நடத்துபவர்கள் மழைக்காலத்தில் சிரமப்படுகின்றனர். இங்கு குளியல் அறை, கழிப்பறையுடன் கூடிய புதிய சமுதாயக்கூடம் கட்ட ராசக்காள்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.----