தேனி : சிறந்த முன்மாதிரிக்கான ' கோல்டன் ஸ்கோட்ச்' விருது போட்டியில் தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வெற்றிபெற மக்கள் இணையத்தில் ஓட்டளிக்கலாம்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை மற்றும் மேம்பாட்டிற்காக விருது வழங்கப்படும். 2003 முதல் சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருது (கோல்டன் ஸ்கோட்ச் விருது) மற்றும் ஆர்டர் ஆப் மெரிட் விருது என தரப்படுகிறது. தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகமானது கொரோனா நோய் தொற்று பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, முன்மாதிரியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள், வெளிப்படையான செயல்பாடுகளை முன்னெடுத்ததால் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அளவில் விருதுக்கான அரையிறுதி போட்டிக்கு தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் தகுதி பெற்றுள்ளது. வெற்றி பெறுவதற்கு நேற்று மாலை வரை குறைந்த நபர்கள் மட்டுமே தங்களது ஓட்டுக்களை இணையத்தில் பதிவு செய்துள்ளனர். மாவட்ட மக்கள், மாணவர்கள் https://exhibition.skoch.in/exhibition/theni-district-police/ என்ற மின்னஞ்சல் முகவரியில் சென்று தங்களது ஆதரவை ஓட்டுக்களாக பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு 94981 01570 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் , என, சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., தெரிவித்தார்.