புவனகிரி; புவனகிரி ஒன்றியம் அம்பாபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் நேற்று காலை மற்றும் மதியம் உணவு வழங்கினர்.நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் மேல் புவனகிரி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் சக்தி, சண்முக சிகாமணி உள்ளிட்ட அதிகாரிகள் ஊராட்சி கிராமங்களில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனை வழங்கினர் .அம்பாபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் விசு வேல்முருகன் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடத்தை திறந்து வைத்து பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டார். நேற்று காலை மற்றும் மதியம் என ஊராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.பி.டி.ஓ., பிரேம்குமார், ஊராட்சி தலைவர் விசு வேல்முருகன், வி.ஏ.ஓ., பாஸ்கர் ஆகியோர் உணவை அப்பகுதியினருக்கு வழங்கினர். ஊராட்சி துணைத் தலைவர் வாசுகி, ஊராட்சி செயலர் சுதாகர், உறுப்பினர்கள உடனிருந்தனர்.