பெண்ணாடம் - பெண்ணாடம் அருகே தொடர் கனமழை காரணமாக இரண்டு கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.'நிவர்' புயல் காரணமாக, தொடர் கனமழை பெய்தது. பெண்ணாடம் அடுத்த துறையூர் கிராமம் கலியபெருமாள் மனைவி சரோஜா, 75; கூரை வீட்டின் சுவர் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. காரையூரில் தர்மலிங்கம் என்பவரது கூரை வீட்டின் சுவர் நேற்று பகல் 1:00 மணியளவில் இடிந்து விழுந்தது. இரண்டு வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த வி.ஏ.ஓ., சரவணன் இடிந்து விழுந்த 2 வீடுகள் குறித்து விசாரித்தார்.