திட்டக்குடி; திட்டக்குடி அருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பற்றி காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி சரண்யா,29; இருவருக்கும் திருமணமாகி 12 வயதில் மகன் உள்ளார். சம்பத்குமார் பணி நிமித்தமாக வெளி நாட்டில் இருந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி மதியம் சரண்யா, விற்கு அடுப்பில் சமைத்த போது அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்தவரை திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.45மணிக்கு இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.