கடலுார்; கடலுார் மாவட்டத்தில், நேற்று 39 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 24 ஆயிரத்து 113 பேர். நேற்று 11 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 124 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 39 பேர் குணமடைந்ததால், இதுவரை 23 ஆயிரத்து 769 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 56 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 695 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 275 பேர் இறந்துள்ளனர். நேற்று இறப்பு இல்லை.