விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் மழையால் 13 வீடுகள் இடிந்து சேதமாகின.'நிவர்' புயல் மழையால் விருத்தாசலம் அடுத்த பெரியகண்டியங்குப்பத்தில் கோதண்டபாணியின் மாடு, பெரியகாப்பான் குளத்தில் இரு பசு மாடுகள், மு.பரூர் கிராமத்தில் ஒரு ஆடு பலியாயின. பெரியகாப்பான்குளம் கதிர்வேல், தே.கோபுராபுரத்தில் அசோதை உட்பட விருத்தாசலம் பகுதியில் 10 குடிசை வீடுகள், 3 ஓட்டு வீடுகள் உட்பட 13 வீடுகள் இடிந்து சேதமாயின.