கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில் 23 குடிசை வீடுகள் சேதமடைந்தன.'நிவர்' புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.மழை அளவு மி.மீ., விபரம்:திருக்கோவிலுார் 93, மாடாம்பூண்டி 74, வேங்கூர் 87, மணலுார்பேட்டை 104, திருப்பாலபந்தல் 68, உளுந்துார்பேட்டை 120.80, பிள்ளையார்குப்பம் 29, எறையூர் 78, கள்ளக்குறிச்சி 42.50, தியாகதுருகம் 65, விருகாவூர் 55, சங்கராபுரம் 40, மூங்கில்துறைப்பட்டு 80, கடுவனுார் 38, அரியலுார் 60, மூரார்பாளையம் 26.50, ரிஷிவந்தியம் 81, சூளாங்குறிச்சி 60, கீழ்பாடி 78, கலையநல்லுார் 80, சின்னசேலம் கச்சிராயபாளையம் 21.50 மி.மீ., மழை பதிவானது.மாவட்டத்தில் மொத்தம் 1,379.30 மி.மீ., சராசரியாக 65.68 மி.மீ., மழை பதிவானது.நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் பூசப்பாடி, நாகலுார், களமருதுார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 23 குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும், மாடாம்பூண்டி, விளந்தை உள்ளிட்ட பகுதிகளில் 3 பசுமாடுகள், 2 கன்றுகள் இறந்தன.