கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று, 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 624 பேர் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 8 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 632 ஆக உயர்ந்தது. இதில், 10 ஆயிரத்து 460 பேர் குணமடைந்துள்ளனர். 106 பேர் இறந்தனர். 66 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.