மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழை நீர் வெளியேற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
05:51

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் தாழ்வான பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் மருத்துவமனை வளாகம் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் புகுந்தது.நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு 9 :00 மணிக்கு முன்னெச்சரிக்கையாக விக்கிரவாண்டி பகுதி முழுதும் மின்தடை செய்தனர். பலத்த காற்று காரணமாக விக்கிரவாண்டி வீரன் கோவில் தெருவில் மரம் முறிந்து மின் கம்பி மேல் விழுந்தது. அதை உடனடியாக பேரூராட்சி பணியாளர்கள் மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் அகற்றினர்.அதேபோன்று மழை காரணமாக விக்கிரவாண்டி, கீழக்கொந்தை ,பாரதி நகர், வ.உ.சி நகர், கே.கே.நகர், உஸ்மான் நகர் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் தயார் நிலையில் இருந்த பேரிடர் மீட்புப்பணி குழுவினர் ஜே.சி.பி., உதவியுடன் வாய்க்கால் எடுத்து தண்ணீரை மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.மழை காரணமாக விக்கிரவாண்டி அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் 120 பேருக்கு தொடர்ந்து உணவு மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X