விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிவர் புயல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதை, அமைச்சர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட தாமரைகுளம் பகுதியில் நிவர் புயல் பாதிப்பால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர் சண்முகம் நேரில் ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட, நகராட்சி ஆணையர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம், வளவனுார், வானுார்,கோட்டக்குப்பம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சண்முகம் அதிகாரிகளிடம் கேட்றிந்து, ஆலோசனைகளை வழங்கினார்.பின் அதிகாரிகளிடம் அமைச்சர் சண்முகம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள நீரை இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.நோய் தொற்று ஏற்படாமல் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவேண்டும். மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல், இருமல் உள்ளோருக்கு உடன் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.ஆய்வின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், கலெக்டர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ., சக்ரபாணி, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேந்திரன், சப்-கலெக்டர் டாக்டர் அனு, டி.எஸ்.பி., நல்லசிவம், நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பசுபதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.