விழுப்புரம்; விழுப்புரம் அருகே நிவர் புயல் காற்றில், வாழை தோப்பில் மரங்கள் விழுந்து சேதமடைந்தது.விழுப்புரம் அடுத்த நன்னாட்டை சேர்ந்தவர் சுரேஷ், 50; இவர், தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பலத்த காற்று வீசியது. இந்த காற்றில், சுரேஷ் நிலத்தில் இருந்த பெரும்பாலான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது.