போலீஸ் டைரி..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
06:41

பூட்டை உடைத்து திருட்டுசூளைமேடு: சூளைமேடு, சண்முகனார் சாலையைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 63; ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர், கடந்த மாதம் பெங்களூருக்கு சென்றார். நேற்று காலை, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து, பிரேம்குமார் சென்னை வந்தார். அப்போது, வீட்டிலிருந்த வெள்ளிப் பொருட்களை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.வழிப்பறி திருடர்கள் கைதுமயிலாப்பூர்: மயிலாப்பூர், தி.நகர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில், வழிப்பறி மற்றும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இது குறித்து, மயிலாப்பூர் போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், கண்ணகி நகரை சேர்ந்த, நடராஜ், 22, ஆகாஷ், 21, உட்பட, இரு சிறுவர்களை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 17 மொபைல் போன்கள், ஆறு டூ - வீலர்கள் மற்றும் ஒரு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டன.* இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட, லஸ் கார்னர் பகுதியை சேர்ந்த, சந்தோஷ்குமார், 19, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, இரண்டு இருசக்கர வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.கஞ்சா வியாபாரிகள் கைதுமெரினா: மெரினா போலீசார், நேற்று மதியம் மாட்டான்குப்பம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற, இருவரை பிடித்து விசாரித்தனர். இதில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜகோபால ரவிக்குமார், 48, கரங்கா நாகேஸ்வரராவ், 38, என்பதும், இருவரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்த போலீசார், 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மருந்தகத்தில் தீ விபத்துசிந்தாதிரிப்பேட்டை: அண்ணாசாலையில், பிகேஸ் மெடிகோ சர்ஜிக்கல்ஸ் என்ற பெயரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடை நடத்தி வருபவர், விஜய் கட்டர், 74. நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த, திருவல்லிக்கேணி தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், தீக்கிரையாகின. சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டு உபயோக பொருட்கள் தீக்கிரைபட்டாபிராம்: பட்டாபிராம், காமராஜபுரம், வடக்கு பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ராதா, 55. இவர் வீட்டில் தனியாக வசிக்கிறார். நேற்று காலை மின்தடை ஏற்பட்டதால், மெழுகுவர்த்தியை கொளுத்தி, 'டிவி' மீது வைத்துள்ளார். பின், வீட்டை பூட்டி, கடைக்குச் சென்றார். சிறிது நேரத்தில், அவரது வீட்டில் பலத்த சத்தத்துடன் கரும் புகை வெளியேறியது. அக்கம்பக்கத்தினர், ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். விபத்தில் 'டிவி' உட்பட வீட்டு உபயோக பொருட்கள் தீக்கிரையாயின.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X