குரோம்பேட்டை; வழக்கம் போல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது.'நிவர்' புயல் காரணமாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளில், பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், தென் சென்னையில் உள்ள ஒரே அரசு மருத்துவமனையான, குரோம்பேட்டை மருத்துவமனையில் பழைய கட்டடத்திற்குள் வெள்ளம் புகுந்தது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வார்டுகள், வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம் ஆகியவை, வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. மருத்துவமனைக்குள் தேங்கிய மழை நீரை, மூன்று மோட்டார்கள் மூலம், இரவு முழுதும் அகற்றினர். தொடர்ந்து மழை பெய்து, மீண்டும் வெள்ளம் தேங்கினால், அதை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.