வெள்ளத்தில் மிதக்கும் புறநகர் பகுதிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
06:51

சென்னை; தொடர் மழையால், சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட, துர்கா அவென்யூ, நேமிநாதன் நகர், சக்தி நகர், அமுதம் நகர் ஆகிய பகுதிகளில், கடுமயைான பாதிப்பு ஏற்பட்டது.பாதிக்கப்பட்டோரை, தீயணைப்பு துறையினர், பைபர் படகுகள் வாயிலாக மீட்டனர்.l செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட, வள்ளல் யூசுப் நகர் மற்றும் அதை சுற்றிய தெருக்களில், 1 முதல் 2 அடி வரையிலும், டெல்லர் அவென்யூ, திருமலை நகர் பகுதிகளிலும், மழை நீர் தேங்கியது. ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்தன. நேற்று முன்தினம் இரவு, மரம் விழுந்தது முதல், அவற்றை அகற்றக்கோரி, நகராட்சி அதிகாரிகளுக்கு, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்த நிலையில், காலை, 10:00 மணியளவிலேயே அப்பணிகள் துவங்கின.இதற்கிடையில், திருமலை நகருக்கு உட்பட்ட, எட்டு முதல் 15 வரை உள்ள வார்டுகளில், மழைநீர் புகுவதை தடுக்க வேண்டும் என, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது.இதையடுத்து, திருமலை நகர்,முதல் பிரதான சாலையில், செம்பாக்கம் ஏரியில் இருந்து, உபரிநீர் வெளியேறும் கால்வாயை ஒட்டி, மணல் மூட்டைகள் கொண்டு, மழை நீர் உட்புகாதவாறு அடைக்கப்பட்டது.இதனால், சம்பந்தப்பட்ட, எட்டு வார்டுகளில் மழை நீர் தேங்குவது தடுக்கப்பட்டது.l சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட, கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, கல்யாணசுந்தரம் தெரு, திருமகள் நகர் பகுதிகளில் உள்ள, 300 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.l ஆவடி மாநகராட்சி விளிஞ்சியம்பாக்கம் ஏரி, கோவிந்தன் தாங்கல் ஏரி, கவரப்பாளையம் ஏரி, சேக்காடு ஏரி, பருத்திப்பட்டு ஏரி, பாலேரிப்பட்டு ஏரி என, ஏரிகள் நிறைந்த பகுதி.ஆனால், இந்த ஏரிகளை இணைக்கும் கால்வாய்கள், தொழிற்சாலை மற்றும் தொழில் வளர்ச்சியால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, மறைந்து விட்டன. நாளடைவில், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த கால்வாயும் காணாமல் போய்விட்டது. தற்போது, மழை நீரை வெளியேற்ற, தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மழை நீர் வடிந்து செல்ல போதிய வழியில்லாமல், ஆவடி, சிந்துநகர், தனலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள், வெள்ள நீரில் மிதக்கின்றன.இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க, முழங்கால் அளவு தண்ணீரில் செல்லும், அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல், ஆவடி பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் கால்வாய், 15 அடி முதல் 20 அடி அகலத்தில் இருந்தது. ஆனால், திருமண மண்டபங்கள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கட்டடங்களின் ஆக்கிரமிப்பால், தற்போது, 5 அடிக்கும் குறைவாக கால்வாய், சுருங்கி உள்ளது.இந்த கால்வாயை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், 'கட் அண்டு கவர்' மூடிய, கான்கிரீட் கால்வாய் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கிடப்பில் போட்டுள்ளனர்.இதனால், ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், குளம் போல் தேங்கிய மழை நீரில், வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி பயணிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X