சென்னை; சென்னையில், புறநகர் மின்சார சிறப்பு ரயில் போக்குவரத்து, நேற்று மதியம் முதல், மீண்டும் துவங்கியது.'நிவர்' புயல் எதிரொலியால், புறநகர் மின்சார ரயில்கள், நேற்று முன்தினம் காலை, 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டு, மறு அறிவிப்பு வரும் வரை ரயில் இயக்கப்படாது என, தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. இதனால், நேற்று முன்தினம் காலை, 10:00 மணியில் இருந்து, நேற்று மாலை வரை, புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.இதன்பின், நேற்று மாலை, 3:00 மணிக்கு, புறநகர் மின்சார சிறப்பு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு இடையே, இரவு, 8:00 மணி வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.ரயில்கள், இரு வழியிலும், ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்பட்டன. இன்று, வழக்கம்போல் புறநகர் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.