சிந்தாதிரிப்பேட்டை; கன மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக பெண் ஒருவர் உயிர் தப்பினார்.சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சந்தில், ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் ஸ்ரீமதி, 58. கன மழை காரணமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் இடது பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக, சிறுகாயமின்றி, அவர் உயிர் தப்பினார்.சம்பவம் அறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், அவரை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தினர். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு, அப்பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன.