செஞ்சி : செஞ்சி ,மேல்மலையனுார் பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
இதில் நந்தன் கால்வாய் விழுப்புரம் மாவட்டத்தின் நுழைவு பகுதியான மாதம்பூண்டியில் நீர் வரத்தை பார்வையிட்டார். உபரி நீர் வெளியேறி வரும் நல்லாண் பிள்ளை பெற்றாள் சாலபுத்தூர் ஏரி, செவல புரை வராகநதி தடுப்பணை, நரசிங்கராயன் பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட வாழை தோட்டத்தை பார்வையிட்டார்.அவலுார்பேட்டை மழையால் பாதிக்கப்பட்டு மேல்மலையனுாரில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களையும், கோவில்புரையூரில் சேதமான கரும்பு பயிரினையும், கப்ளாம்பாடி கிராமத்தில் சேதமடைந்த வாழை தோப்பினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது சப் கலெக்டர் அனு, பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் ஜவகர், செஞ்சி தாசில்தார் ராஜன், பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியன், அறவாழி, பொதுப்பணித் துறை நீர் பாசன பிரிவு உதவி பொறியாளர்கள் கனகராஜ், தினேஷ், வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெரியசாமி, தாசில்தார் நெகருன்னிசா, வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.