மாவட்டத்தில் மழை பெய்தும் 50 சதவீத ஏரிகள் நிரம்பவில்லை! பராமரிப்பில்லாத ஏரிகளில் தண்ணீர் வீண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
22:31

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பெய்த பலத்த மழையால், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகளில் 62 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவில் நிரம்பியுள்ளன.



விழுப்புரம் மாவட்டத்தின் வழியே ஓடும் தென்பெண்ணை, சங்கராபரணி ஆகிய நதிகளும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகளுமே, மாவட்ட விவசாயத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் மேற்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் தென்பெண்ணை ஆறுகளில் பெருக்கெடுத்து வந்து, உபரி நீர் ஏரிகளில் நிரம்பும்.



மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1,060 மி.மீ., ஆகும். இதில், தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழை 638 மி.மீ., என ஆண்டின் சராசரி மழை அளவாக உள்ளது. மாவட்டத்தில் ஆண்டின் மொத்த மழையில் 33.6 சதவீதம் தென்மேற்கு பருவ காலத்திலும், 60 சதவீதம் வடகிழக்கு பருவ காலத்தில் பெய்யும்.தென்மேற்கு பருவமழை துவங்கும் ஜூலை மாதம் முதல் செப்., மாதம் வரை இந்தாண்டு மாவட்டத்தில் 320.49 மி.மீ., பெய்துள்ளது. இது சராசரி மழை அளவை விட 36.17 மி.மீ., குறைவாக பெய்துள்ளது.



கோடை காலத்தில் வறண்டு கிடக்கும் நீர் நிலைகள், தென்மேற்கு பருவமழை காலத்தில் நீர் பிடிப்பு ஏற்பட்டு, வடகிழக்கு பருவமழை காலத்தில் நிரம்பும்.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையானது, விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மாதமான நவம்பரில் துவங்கியது. இதனால், மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதையடுத்து, நிவர் புயலால் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், ஏரி, குளங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து துவங்கியது.அதன்படி, மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகளில், 62 ஏரிகள் முழு அளவிலும், 86 ஏரிகள் 75 சதவீதமும், 182 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. மேலும், 111 ஏரிகள் 50 சதவீதத்திற்கு குறைவாகவும், 65 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாக நீர் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை டிச., மாதம் வரையில் மட்டுமே பெய்யக்கூடும். ஆனால், மாவட்டத்தில் இதுவரை 50 சதவீத ஏரிகள் கூட முழு கொள்ளளவு நிரம்பவில்லை. வடகிழக்கு பருவமழை முடிவதற்குள், மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்புமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மேலும், மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்ட ஏரிகளை தவிர்த்து, பிற ஏரிகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. இதனால், மதகுகள் சேதமடைந்து காணப்படும் ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல், வெளியேறி வீணாகி வருகின்றது. இதனால், மாவட்டத்தில் பருவமழையின்போது, ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X