நுங்கம்பாக்கம் : நுங்கம்பாக்கத்தில், வடிகால் அடைப்பை அகற்றி, மழைநீரை வடிய செய்த, போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
சென்னையில், 'நிவர்' புயல் காரணமாக, பல இடங்களில், பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீரால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில் தேங்கிய மழைநீர் வடியவில்லை.இதை அறிந்த நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் கதிரவன், ராமமூர்த்தி ஆகிய இருவரும், மாநகராட்சி உதவியை எதிர்பாராமல், வடிகால் மூடியை அகற்றி, அடைப்புகளை தங்களது கையால் அள்ளி வெளியேற்றினர்.
போக்குவரத்து போலீசாரின் இந்த செயல், வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவற்றை பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.