'செஞ்சுரி' நாயகனை தோளில் சுமந்த எஸ்.ஐ.,க்கு பாராட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
22:44

சென்னை : புளியந்தோப்பில், மழைநீரில் சிக்கி, வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த, 107 வயது முதியவரை, தோளில் சுமந்து காப்பாற்றிய, எஸ்.ஐ., மற்றும் போலீசாரை பாராட்டி, கமிஷனர் வெகுமதி அளித்தார்.சென்னை, புளியந்தோப்பு காவல் நிலைய, எஸ்.ஐ., ஹரிஹரபுத்திரன். இவர், நவ., 25ம் தேதி மதியம், 2:30 மணியளவில், அங்குள்ள நாராயணசாமி தெருவில், இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில், ரோந்து பணியில் ஈடுபட்டார்.இப்பகுதியில் வசிப்போர், மழை வெள்ளம் காரணமாக, வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.நிவாரண முகாம்அங்குள்ள வீடு ஒன்றில், எம்ரோஸ் எனும், 107 வயது முதியவர், படுத்த படுக்கையாக கிடந்தார்.இவரை, ஹரிஹரபுத்திரன் தோளில் சுமந்து சென்று, நல்லசத்திரம் பகுதியில் உள்ள, தற்காலிக நிவாரண முகாமில் சேர்த்தார். பின், போலீசார் உதவியுடன் மேற்கண்ட பகுதியில் சிக்கித் தவித்த அனைவரும் மீட்கப்பட்டனர்.இச்சம்பவத்தை பாராட்டி, ஹரிஹரபுத்திரன் முதியவரை தோளில் சுமந்து சென்ற படத்தை, போலீஸ் கமிஷனர், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டார். இதை பார்த்த முதல்வர், இ.பி.எஸ்., சென்னை போலீசாரின் செயலுக்கு, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.அதேபோல, புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஓரமாக, மழையில் நனைந்தபடி ஆதரவற்று நின்ற சையது அன்சார், 70, மற்றும் மனோகர், 56, ஆகியோரை, ஹரிஹரபுத்திரன் தலைமை காவலர் மனோகருடன் சேர்ந்து மீட்டார்.பின், நிவாரண முகாமில் சேர்த்து, உணவு மற்றும் உடைக்கு ஏற்பாடு செய்தார்.வெகுமதிl துரைப்பாக்கம், டி.சி.எஸ்., காலனியைச் சேர்ந்த, கலாவதி, 67, என்பவர் மகள்கள் திட்டியதால், செம்மஞ்சேரி ஏரியில் மூழ்கி, தற்கொலைக்கு முயன்றார். இவரை, எஸ்.ஐ., பத்மநாபன், காவலர் ராஜசேகர் உள்ளிட்டோர் காப்பாற்றினர்.l குமரன் நகர் பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து திருடிய, மூவரை, சில மணி நேரத்தில், சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தீபக்குமார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கைது செய்து, 30 சவரன், 40 ஆயிரம் ரூபாயை மீட்டனர்.l மெரினா காவல் நிலைய எல்லையில், கஞ்சா கடத்திய, இருவரை மயிலாப்பூர் துணை கமிஷனரின் தனிப்படை போலீஸ் உதவி கமிஷனர் இளைய ராஜா, போலீஸ்காரர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கைது செய்தனர். இவர்கள் அனைவரையும், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று நேரில் அழைத்து, பாராட்டி, வெகுமதி அளித்தார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X