பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மகள் சாவில் தந்தேகம் இருப்பதாக, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன், 48; இவரது, மகள் பூமிகா, 20; இவரும், குத்தாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தனும், கடந்த இரண்டு ஆண்டாக காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். கணவர் கோவிந்தன் வீட்டில் வசித்த பூமிகா நேற்று முன்தினம் துாக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பூமிகாவின் தாய் பவாணி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்குப் பதிந்து, விசாரிக்கிறார்.திருமணமாகி நான்கு மாதங்களே ஆனதால், சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன் விசாரிக்கிறார்.