கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 24 ஆயிரத்து 124 பேர். நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 22 பேர் குணமடைந்ததால், இது வரை 23 ஆயிரத்து 791 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 78 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 141 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதுவரை 275 பேர் இறந்துள்ளனர். நேற்று இறப்பு இல்லை.