புவனகிரி : புவனகிரி அருகே வடக்கு திட்டையில் செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சப்தகன்னிகள் ஆலய நுாதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், கோமாதா பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதல் கால யாக சாலை பூஜையும், இரவு 10 மணிக்கு அஷ்டபந்தனம் நடந்தது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு விக்ன விநாயகர் பூஜையுடன் இரண்டாம் கால பூஜை துவங்கியது. பின் கடம் புறப்பாடு, சிவசுப்பிரமணியர் விமானத்தில் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.