மந்தாரக்குப்பம் : நெய்வேலி ஆர்.பி.எஸ்., ஏஜென்சி இல்ல திருமண விழா வடலுாரில் நடைபெற்றது.நெய்வேலி ஆர்.பி.எஸ்., ஏஜென்சி உரிமையாளர் பன்னீர்செல்வம்- தங்கம் தம்பதி மகள் இளந்தென்றல், திண்டிவனம் தாகூர் மெட்ரிக் பள்ளி நிறுவனர் தினகரன்-ஜோதி மகன் விஷ்ணுமகேஸ்வரன் திருமணம் நேற்று முன்தினம் வடலுார் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் நடந்தது.
திருமண விழாவை சென்னையில் இருந்து கானொலி காட்சி மூலமாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தொடங்கி வைத்தார். திராவிடர் கழக செயல் தலைவர் அறிவுக்கரசு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திண்டிவனம் தாகூர் கல்விக் குழும நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் ராஜாபாதர் வாழ்த்துரை வழங்கினார். கடலுார் மண்டல தி.க., தலைவர் பன்னீர் செல்வம் வரவேற்றார்.
நெய்வேலி எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன், முன்னாள் எம்.பி., குழந்தைவேலு, திராவிடர் கழக பொதுச் செயலாளர் சந்திரசேகரன், பேராசிரியர் ஜெயக்குமார், தி.மு.க.. விவசாய அணி ராமசாமி, தி.க.,மண்டல செயலர் தாமோதரன், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலர் ஜெகன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பிச்சை, வர்த்தக சங்க நிர்வாகிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர்கள், வியாபாரிகள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர். ஆர்.பி.எஸ்., ஏஜென்சி நிர்வாக இயக்குனர் பண்பாளன் நன்றி கூறினார்.