நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர்.அதே போல் கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் மற்றும் சி.என்.பாளையம் மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர்,மலையாண்டவர் என்ற ராஜேஸ்வரி அம்மன் சமேத ராஜராஜேஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.