காரைக்கால் : காரைக்கால் என்.ஐ.டி.,யில் 'ஆராய்ச்சி கருவி மற்றும் நுட்பங்கள்' என்ற தலைப்பில் 5 நாள் பயிலரங்கம் நடந்தது.
பயிலரங்கத்தை என்.ஐ.டி., இயக்குநர் சங்கரநாராயணசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பேராசிரியர் அகிலா முன்னிலை வகித்தார். புதுமை மற்றும் சாமானியர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான திறன் சேகரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பேராசிரியர் அகிலா தெரிவித்தார். மேலும் புதிதாக வளர்ந்து வரும் கருவிகள் மற்றும் நுட்பங்களை மாற்றியமைக்க தயாராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் விளக்கப்பட்டன.கருத்தரங்கில் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேந்திரன், கோவிந்தராஜ், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.