மீட்பு பணியில் ஊழியர்கள்
பழநி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட பழநி நகராட்சி பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஆணையர் லட்சுமணன் ஏற்பாட்டில் துப்புரவு பணியாளர்கள் 25, எலெக்ட்ரிசியன், ஓட்டுனர்கள் சென்றுள்ளனர். அவர்களுக்கு தேவையான வாகனங்கள், உபகரணங்களும் அனுப்பப்படடுள்ளன. விழுப்புரம் பகுதியில் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கிராம உதவியாளர் பணி
ஒருவர் பலி
சாணார்பட்டி: நத்தம் ரோடு நொச்சியோடைபட்டியை அடுத்துள்ள அனுகிரகா கல்லூரி அருகே 36 வயதுள்ள நபர் காயங்களுடன் இறந்து கிடந்தார். ரோந்து போலீசார் விசாரணையில், அவர் குள்ளனம்பட்டியை சேர்ந்த முருகன் எனவும், திருமணமாகி சிலவருடங்களில் மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார் என தெரிந்தது. மனைவி பிரிந்ததால் மனநலம் பாதித்து இருந்துள்ளார் எனவும், இந்நிலையில் ரோட்டோரம் நடந்து சென்றபோது வாகனம் மோதி இறந்தார் என தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலைபழநி: அடிவாரம் குறும்பப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் 35. திருமணமாகவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு மாட்டி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.