திண்டுக்கல்: 'திண்டுக்கல் மாவட்ட தபால் நிலையங்களில் ஒரே இடத்தில் பல்வேறு சேவைகளை பெற பொது சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது' என, முதநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: தலைமை, துணை உட்பட 72 தபால் நிலையங்களில் 'பொது சேவை மையம்' துவங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மின் கட்டணம், தொலைபேசி, அலைபேசி கட்டணம், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம். விமானம், ரயில், பஸ் பயணச்சீட்டு முன்பதிவு, பள்ளி, கல்லுாரி கட்டணம் செலுத்துதல், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். தேசிய ஓய்வூதிய திட்டம் உட்பட பல சேவைகள் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.